பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 134 142. திருச்செங்காட்டங்குடி கணபதிச்சுரர்-திருகுகுழல்நாயகி சம்பந்தர் : 2. அப்பர் : 1. வழிபட்டதான் : 5-5-58, 23-5-55, நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. திருக்கண்ணபுரத்தினின்றும் ஒருகல். சிறுத்தொண்டநாயனார் சிராள தேவன் எனும் தன் ஒரே மைந்தனை அறுத்துக் கறி சமைத்து, கடவுளுக்கு அளித்து, மைந்தனோடும் மனைவியோடும் வீடுபேறடைந்த திருத்தலம். சிறுத்தொண்டர், அவர் மனைவி வெண்காட்டுதங்கை, மைந்தன் சிராளன், தாதி சந்தனநங்கை இவர்கள் திருவுருவங்கள் கோவிலில் இருக்கின்றன. சம்பத்தர் கூர்ஆரல் இரைதேர்ந்து குளம்,உலவி வயல்வாழும் தாராவே! மடநாராய்! தமியேற்குஒன்று உரையீரே! சிராளன் சிறுத்தொண்டன் செங்காட்டாங் குடிமேய பேர்ஆளன் பெருமான்தன் அருள் ஒருநாள் பெறலாமே. அப்பர் பெருந்தகையை, பெறற்கரிய மாணிக் கத்தை. பேணிநினைந்து எழுவார்தம் மனத்தே மன்னி இருந்தமணி விளக்குஅதனை. நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை. எண்தோள் வீசி அரும்திறல்மா நடம்ஆடும் அம்மான் தன்னை. அம்.கனகச் சுடர்க்குன்றை. அன்றுஆ லின்கிழ்த் திருந்துமறைப் பொருள்நால்வர்க்கு அருள்செய் தானை. செங்காட்டாங் குடிஅதனில் கண்டேன் நானே!