பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இருத்தலப்பயணம் சேக்கிழார் சிறுத்தொண்ட ருடன்கூடச் செங்காட்டங் குடியில்எழுந்து அருளிச் சீர்த்தி நிறுத்துஎண்திக் கிலும் நிலவும் தொண்டர்.அவர் நண்புஅமர்ந்து நீல கண்டம் பொறுத்துஅண்டர் உயக்கொண்டார் கணபதிச் சரத்தின்கண் போகம் எல்லாம் வெறுத்துஉண்டிப் பிச்சைதுகர் மெய்த்தொண்ட ருடன்அணைந்தார் வேத கிதர். 143. திருமருகல் மாணிக்கவண்ணர்-வண்டுவார்குழலி சம்பந்தர் : 2 அப்பர் : 1. வழிபட்டநாள் : -5-56, 23--கே. திருப்புகலூரினின்றும் தென்கிழக்கே மூன்றரைக் கல். இதற்கு வடகிழக்கே ஒரு மைலில் சாத்தமங்கை என்னும் தலம் இருக்கிறது. பாம்பு கடித்து இறந்த செட்டிப் பிள்ளையைத் திருஞான சம்பந்தர் பதிகம்பாடி உயிர்ப்பித்த தலம். தான் வரித்த கணவனைப் பாம்பு திண்டலும் அதற்கு இரங்கி, திருமருகல் தலத்தில் வணிகப்பெண் கூறுவதாகச் சேக்கிழார் அடிகள் பாடும் "அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய" என்ற பாடலும்,"வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல்சிறி"என்ற பாடலும் மிக அருமையானவை. சம்பந்தர் சடையாய் எனுமால் சரண்நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால், மடைஆர் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ? இவள் உள் மெலிவே.