பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 133 அப்பர் ஒது பைங்கினிக்கு ஒண்பால் அமுதுஉனட்டிப் பாது காத்துப் பலபல கற்பித்து. மாது தான்மகு கல்பெரு மானுக்குத் துனது சொல்ல விடத்தான் தொடங்குமே. சேக்கிழார் பொங்குவிடம் தீர்ந்துஎழுந்து நின்றான்சூழ்ந்த பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப அங்கையினை உச்சியின்மேல் குவித்துக்கொண்டு.அங்கு. அருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த தங்கைஅவள் தனை.தயந்த நம்பி யோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் மங்குல்தவழி சோலைமலி புகலி வேந்தர் மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார். 144. திருச்சாத்தமங்கை அயவந்திசுரர்-மலர்க்கண்ணம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநான் : 8-5-56, 23-6-கே. திருமருகலுக்கு வடகிழக்கே ஒரு கல். இக்கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். திருநீலநக்க நாயனார் பிறந்தருளிய தலம். திருநீலநக்க நாயனாரைச் சம்பந்தர் இத் தலத்துத் தேவாரப் பதிகத்து வைத்துப் பாடியுள்ளார். திருநீலநக்க நாயனார் என்ற அந்தணர் திருஞானசம்பந்த மூர்த்திகளோடு வந்த திருநீலகண்டப் பெரும் பாணர்க்கு வேள்விச்சாலையில் தங்க இடம் கொடுத்துச் சிறப்பித்தது இத் தலத்திலேயே என்று பெரியபுராணம் விதந்து ஒதும். சம்பந்தர் மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன் மன்னும் நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர் அறையும்.ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும் முறைமையால் ஏத்தவல்லார் இமையோரிலும் முந்து வாரே!