பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮器强 திருத்தலப்பயணம் சேக்கிழார் பூத்த பங்கயப் பொகுட்டின்மேல் பொருகயல் உகளும் காய்த்த செந்நெலின் காடுது.ழ் காவிரி நாட்டுச் சாத்த மங்கைஎன்று உலகெலாம் புகழ்வுறும் தகைத்தால் வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு. 145. நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணர்-நீலாயதாட்சி சம்பந்தர்: 2 அப்பர் : 4 சுந்தரர் : 1. வழிடடநாள் : 1-9-56, 11-3-65. இரயில் நிலையம். கடற்கரைப் பட்டினம். மிகப் பழமையான நகரம், அதிபந்த நாயனார் பிறந்தருளிய தலம். சப்தவிடங்கத்தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் சுந்தரமூர்த்திகள் தமக்கு வேண்டும் பொருள்களை எல்லாம் இறைவனிடம் கேட்கின்றார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இத்தலத்துக்குப் புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் உயர்ந்தபோதுஇன் உருவத்து உடைவிட்டு உழல்வார்களும் பெயர்ந்தமண்டை இடுபிண்ட மாஉண்டு உழல்வார்களும் நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடம்ஆவது கயம்கொள்ஒதம் கழிதழ் கடல்நாகைக் காரோணமே! <s LiLiff செம்துவர் வாய்க்கரும் கண்இணை வெண்நகைத்தேன்மொழியார் வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்தசெல்வக் கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம்என்றும் சிந்தைசெய் வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே!