பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv புலவர் 'ராய.சொ. அவர்கள் துணையுடன் வெளியிட முன் வந்த மணிவிழாத் தலைவர் அவர்கள் நம் நன்றி கலந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியர். மனிதன், வாழ்வில் அறுபது ஆண்டுகள் ஒரு பகுதி. ஆண்டுகளின் எண்ணிக்கையும் அறுபது. நாயன்மார்களுள் சுந்தரர், சடையர், இசை ஞானியார் நீங்கலாக அடியார்கள் எண்ணிக்கையும் அறுபதே. இல்லற வாழ்க்கையின் பயன்பெரும் பகுதியை அனுபவித்த நிலையில் மணிவிழாவுக்குப் பின் வாழ்க்கையின் பிற் பகுதியைத் தொடங்குகிறான். உடல் பெற்ற பயனை ஒரளவு மனிதன் துய்த்தபின்னர் உயிர்க்குறுதி பயக்கும் ஆன்ம வாழ்வில் கவனம் செலுத்தும் வாய்ப்புக் கிட்டுகிறது. இதை நன்கு பயன்படுத்திக் கொள்பவனே உண்மை அறிவாளி. இவ்வகையி "செட்டியார்" அவர்கள் தனது வாழ்க்கை முறையை நன்கு அமைத்துக் கொண்டுள்ளார். அன்னாருக்கும் அன்னார் குடும்பத் தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நீண்ட நல்வாழ்வும் பிற வெல்லாப்பாக்கியமும் அருள் பாலிக்க வேண்டுமாய் அவனிணையடிகளை இறைஞ்சுகின்றேன். இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பை யளித்தமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின்! பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே' -திருமந்திரம். வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' -குறள் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழ்க உலகெலாம்! அ. உத்தண்டராமன்