பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருத்தலப்பயணம் 147. கிழ்வேளூர் கேடிலியப்பர்-வனமுலைநாயகி சம்பந்தர்: . அப்பர் : 1. வழிபட்டநாள் : 1-9-56, 11-3-65. இரயில் நிலையம். திருவாரூர்-நாகப்பட்டினம் நெடுஞ் சாலையில் திருவாரூரக்குக் கிழக்கே 7 கல்தொலைவு. கோவில் பெரியது. கட்டுமலை மேல் இருக்கின்றது. இங்கே எழுந்தருளி இருக்கின்ற கடவுளுக்குக்கேடிலியப்பன் என்பதுபெயர். அப்பர் சுவாமிகள் பாடல்தோறும் "கிழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே" என்று வாய்கொள்ளாமல் பாடி மகிழ்வார். சம்பந்தர் சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தேங்கவைத்து அழகாக நாடு லாவிய பலிகொளும் நாதனார் நலமிகு கிழ்வேளூர்ப் பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுள் பிரியாது நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே. அப்பர் சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் துங்காதார் மனத்துஇருளை வாங்கா தானை, நற்பான்மை அறியாத நாயி னேனை நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானை. பற்பாவும் வாயாரப் பாடி.ஆடி, பணிந்துஎழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பானைக் கிழ்வேளூர் ஆளம் கோவை, கேடிலியை நாடும்அவர் கேடி லாரே.