பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருத்தலப்பயணம் அப்பர் ஆராத இன்னமுதை. அம்மான் தன்னை. அயனொடுமால் அறியாத ஆதி யானை, தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை. சங்கரனை, தன்ஒப்பார் இல்லா தானை. நீரானை, காற்றானை. தியா னானை. நீள்விகம்பாய் ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த பாரானை. பள்ளியின்முக் கூட லானை. பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 150. திருவாரூர் வன்மீகநாதர்-அல்லியங்கோதை புற்றிடங்கொண்டஈசர்-கமலாம்பிகை சம்பந்தர் 5 அப்பர் : 21. சுந்தரர் : 8. வழிபட்டநாள் : 30-8-56, 12-3-55. இரயில் நிலையம், கோவிலுக்குத் திருமூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் பெயர். ஐம்பெரும் பூதத்தலங்களுள் இது பிருதுவித்தலம். சப்தவிடங்கத்தலங்களுள் இது ஒன்று. "பிறக்க வீடளிக்கும் தலம்" என, இத்தலத்தைப்பற்றிப் பல புராணங்களும் பேசும், "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்பார் சுந்தரமூர்த்தி அடிகள். இங்குள்ள தேவாசிரியன் என்னும் ஆயிரக்கால் மண்டபத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை அருளினார் €T 6ör Li. பெரியபுராணத்துக்கு மூலகாரணமாக இருந்தது இத்தலமே. சுந்தரமூர்த்தி சுவாமிகள் காதையில் பெரும்பகுதி நடந்தது இங்குதான். பரவையார் வாழ்ந்தது இப்பழம் பதியிலேயே, மனுச்சோழ மன்னன் நீதிசெலுத்தியது இத்திருவாரூரிலேயே. திருவாரூர் சோழர்க்ட்கு ஒருகாலத்துத் தலைநகரமாக இருந்தது. உலகத்திலேயே பெரிய தேர் திருவாரூர்த் தேர்தான். கோவில் மிகப்பெரியது. நான்குபுறமும் கோபுரங்கள்