பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு #39 கொண்டது. கோவிலுக்கு எதிரிலுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம்பெரிதினும் பெரிது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் வக்கரிக்காமல் ஒரேவரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வேறுசில தலங்களிலும் காணப் பெறுகின்றன. தியாகராச சுவாமிக்கு நடக்கும் சாயரட்சைதிடமே ஒருதனி அழகு கொண்டது. தேவாரப் பெருக்கத்தில் இரண்டாவது திருவாரூர். திருவாரூரக்கு 34 தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. அதோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், ஆகிய பாடல்களும் பெற்ற காரணத்தால் திருவாரூர் பஞ்சபாசுரமும் பெற்ற தலம் ஆகின்றது. பஞ்ச பாசுரம், சிதம்பரம், திருவாரூர் இரண்டுக்கும் மட்டுமே இருக்கின்றன. திருவாரூர் தில்லையினும் பழமையானது என அப்பர் சுவாமிகள் பெருமிதத்தோடு பாடுவார். விறல்மிண்ட நாயனார். நமிநந்தியடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள், கழற்சிங்கநாயனார் முதலிய அடியார்கள் வீடு பேறடைந்த தலம் திருவாரூர். சம்பந்தர் அஞ்சும்ஒன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில் குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர் பஞ்சியாருமெல்லடிப் பணைத்தகொங்கை நுண்இடை அஞ்சொலார் அரங்குஎடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே. அப்பர் பாடகம்சேர் மெல்லடிநல் பாவை யாளும் நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான் வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ? விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ? மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை, ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ? அணிஆரூர் கோயிலாக் கொண்ட நாளே?