பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 141 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் காளை வடிவுஒழிந்து கையுறவோடு ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன்-பாளை அவிழ்,கமுகம் பூங்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்கமுகம் கூம்புகளின் கை. சேரமான் பெருமான் தாயனார் இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில் உழையாகப் போந்தது.ஒன்று உண்டே-பிழையாச்சிர் அம்மான் அனல்ஆடி ஆரூர்க்கோன் அன்றுஉரித்த கைம்மானேர் அன்ன களிறு. சேக்கிழார் நிலம கட்கு.அழகு ஆர்திரு நீள்துதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து அலகில் சீர்த்திரு ஆரூர் விளங்குமால். 151. திருவாரூர் அரநெறி அரநெறியப்பர்-வண்டார்குழலி அப்பர் : 2. வழிபட்டநாள் : 30-8-56, 12-3-55. இக்கோவில் திருவாரூர்ப் பெரிய கோவிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கின்றது. மேற்குப் பார்த்த சன்னிதி. நமிநந்தியடிகள் நாயனார் தண்ணிரால் விளக்கேற்றிய தலம் இது. நமிநந்தியடிகளை அப்பர் சுவாமிகள் தாண்டகத்தில் வைத்துப் போற்றுவர்.