பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 145 157. குடவாயில் கோணேசுரர்-பெரியநாயகி சம்பந்தர் : .ே வழிபட்டதான் : 2-9-58, 13-3-85. கொரடாச்சேரி இரயில் நிலையத்திலிருந்து வடக்கே எட்டுக்கல்அளவுகும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் இத்தலம் இருக்கிறது. சம்பந்தர் அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும்ஆர்ப்ப அங்கையில் செடியார்ந்த வெண்தலைஒன்று ஏந்திஉலகம் பலிதேர்வீர் குடியார்ந்த மாமறையோர் குலாவிஏத்தும் குடவாயில் படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே. 158. திருச்சேறை (உடையார்கோயில்) செந்நெறியப்பர்-ஞானவல்லி சம்பந்தர் : 1. அப்பர் : 2. வழிபட்டநாள் : 2-9-56, 25-6-85 கும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத் திலிருந்து ஒன்பது கல் அளவு. இங்குப் பெருமாள் கோயிலும் பாடல் பெற்றது. சம்பந்தர் பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம் ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய வாடினர் படுதலை இடுபலி அதுகொடு மகிழ்தரும் சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.