பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருத்தலப்பயணம் அப்பர் ஓர்த்துஉள வாறுநோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய்என்று எண்ணி, மயக்கில்வீழ்ந்து அழுந்துவேனை. பேர்த்துள்னை ஆளாக்கொண்டு பிறவிவான் பிணிகள் எல்லாம் திர்த்துஅருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. 159. நாலுர்மயானம் பலாசவனேசுரர்-பெரியாம்பிகை. சம்பத்தர் : 1. வழிபட்டதான் : 1.3-8-57, 25-6-85. குடவாயிலுக்கு வடகிழக்கு மூன்றுகல் தொலைவு. நாலுணர் மயானத்திற்குத்தென்கிழக்கு ஒருகல் அளவில் நாலூர் என்னும் ஊர் இருக்கிறது. சம்பந்தர் மாலோடு நான்முகனும் நேட வளர்எரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்துளம் பாவோடு நெய் ஆடி பாதம் பணிவோமே. 160. கடுவாய்க்கரைப்புத்துர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுரர்-சிவாம்பிகை. ೫uf : I. . வழிபட்டநாள் : 21-4-57, 13-1-66. குடவாயிலிலிருந்து மேற்கே மூன்றரைக்கல் அளவு. கும்பகோணம்-திருவாரூர்ப்பாதையில்வலங்கைமானிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.