பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு #4% 164, பரிதிநியமம் (பருத்தியப்பர்கோயில்) பரிதியப்பர்-மங்களநாயகி சம்பத்தர் : 1. வழிபட்டதான் : 26-3-57, 12-1-68. தஞ்சை-நீடாமங்கலம் இருப்புப்பாதையிலுள்ள சாலிய மங்கலம் இரயில் நிலையத்தினின்றும் தென்மேற்கு 8 மைல், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தஞ்சாவூரி னின்றும் பத்து மைல். சம்பந்தர் வாள்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதுஅஞ்ச நீள்முகம் ஆகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து நாள்முகம் காட்டி. நலம்கவர்ந்த நாதர்க்கு இடம்போலும் பாண்முகம் வண்டினம் பாடிஆடும் பரிதிந் நியமமே. 165. வெண்ணி வெண்ணிக்கரும்பர்-அழகியநாயகி சம்பந்தர் 1. அப்பர் : 2 வழிபட்டநான் : 27-7-57, 20-6-65. தஞ்சாவூர்-நீடாமங்கலம் இருப்புப்பாதையில் உள்ள கோயில் வெண்ணி இரயில் நிலையம், நீடாமங்கலத்தினின்றும் மேற்கே 4 கல் அளவு. சம்பந்தர் கனிதனை, கனிந்தவ ரைக்கலந்து ஆட்கொள்ளும் முனிதனை. மூவுல குக்குஒரு மூர்த்தியை, நனிதனை, நல்லவர் தாம்தொழும் வெண்ணியில் இனிதனை ஏத்துவர் ஏதம் இலா தாரே.