பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருத்தலப்பயணம் அப்டர் கைஉலாம் மூவிலைவேல் ஏந்தி னாரும். கரிகாட்டில் எரியாடும் கடவு ளாரும், பைஉலாம் நாகம்கொண்டு ஆட்டு வாரும், பரவுவார் பாவங்கள் பாற்று வாரும். செய்உலாம் கயல்பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும், மெய்எலாம் வெண்ணிறு சண்ணித் தாரும், வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே. 166. பூவனூர் புட்பவனேசுரர்-கற்பகவல்லி அப்பர் : 1. வழிபட்டநாள் : 11-1-57, 22-6-65. நீடாமங்கலம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கு 2 கல் அளவு. மன்னார்குடிக்குப்போகும் நெடுஞ்சாலையில் பாமணி ஆற்றின் மேல்கரையில் இருக்கிறது. அப்பர் அனுச யப்பட்டு அது.இது என்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவ னுரனைப் போற்றுவார் மனித ரில்தலை யான மனிதரே. 167. பாதாளிச்சுரம் (பாமணி) சர்ப்பபுரீசுரர்-அமிருதநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 5-6-57, 22-6-65. மன்னார்குடி இரயில் நிலையத்தினின்றும் வடக்கே ஒன்றரைக்கல் அளவு.