பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 151 சம்பந்தர் நீடலர் கொன்றையோடு நிரம்பா மதிதடி வெள்ளைத் தோடமர் காதில் நல்ல குழையான் சுடுநீற்றான். ஆடர வம்பெருக அனல்ஏந்திக் கைவீசி, வேதம் பாடலி னால்இனி யான்உறை கோயில் பாதாளே. 168. திருக்களர் களர்முனைநாதர்-அமுதவல்லி சம்பந்தர் : 1. வழிபட்டதான் : 12-5-56, 10-3-65. திருத்துறைப் பூண்டியினின்றும் மேற்கே மன்னார்குடி செல்லும் சாலையில் 6% கல் சென்று.அங்கிருந்து தெற்கே2% மைல் செல்ல வேண்டும். கோயில் பெரிது. கோவிலுனர் மடாலயத்தில் அதிபதியாக இருந்த வீரசேகர ஞானதேசிக சுவாமிகள் இங்குக் கோவில் பணி செய்து. இத்தலத்தில் சமாதியானார். அவருடைய அழகிய சமாதிக் கோயில் சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்றது. அவருக்குத் "திருக்களர் ஆண்டவர்" என்று பெயர். சம்பந்தர் கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழில்குல வும்வ யல்இடைச் சேலிளம் கயலார் புனல்து.ழ்ந்த திருக்களருள் நீலம் மேவிய கண்ட னேநிமிர் புன்ச டைப் பெரு மான்எ னப்பொலி ஆல நீழலுளாய்! அடைந்தார்க்கு அருளாயே.