பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திருத்தலப்பயணம் 169. சிற்றேமம் (சிற்றாம்பூர் சிற்றாய்மூர்) பொன்வைத்தநாதர்-அகிலாண்டநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 1.1-5-56, 21-8-65. திருத்துறைப்பூண்டி-திருவாரூர் இரயில் பாதையில் உள்ள ஆலத்தம்பாடி இரயில் நிலையத்தினின்றும் சுமார் 5 மைல் தொலைவில் உள்ளது. குறுக்கே ஒரு ஆறு கடக்க வேண்டும்: பாலம் இல்லை. சம்பந்தர் நிறைவெண் திங்கள் வாள்முக மாதர் பாடநீள்சடைக் குறைவெண் திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான் சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்சிற் றேமத்தான் இறைவன் என்றே உலகெலாம் ஏத்த நின்ற பெருமானே. 170. திருஉசாத்தானம் (கோவிலுர்) மந்திரபுரீசுரர்-பெரியநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 2-10-55, 1-1-66. முத்துக்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. இராமன். இலக்குவன், சாம்புவான். சுக்கிரீவன். அநுமன் முதலியோர் வழிபட்ட தலம் என்ப. சம்பந்தர் நீரிடைத் துயின்றவன். தம்பிநீள் சாம்புவான். போருடைச் சுக்கிரீ வன்.அது மான்தொழக் காருடை நஞ்சுண்டு காத்துஅருள் செய்தஎம் சீருடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே.