பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 158 171. இடும்பாவனம் சற்குணநாதர்-மங்களநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டதான் : 1-10-55, 1-4-86 காரைக்குடி-மாயூரம் இருப்புப் பாதையில் உள்ள தில்லைவிளாகம் இரயில் நிலையத்திலிருந்து சுமார் நான்கு மைல். இத்தலத்திற்கு ஒரு மைலில் தில்லைவிளாகம் என்ற ஊரில் அழகிய நடராசர் கோயிலும், இராமர் கோயிலும் இருக்கின்றன. சம்பந்தர் நீறேறிய திருமேனியர் நிலவும்.உலகு எல்லாம் பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக் கூறேறிய மடவாள்.ஒரு பாகம்மகிழ்வு எய்தி ஏறேறிய இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே. 172. கடிக்குளம் (கற்பகனார்கோயில்) கற்பகேசுரர்-செளந்தரநாயகி சம்பந்தர் s I. வழிபட்டநான் : 1-10-55, 1-1-86 இடும்பாவனம் கோயிலினின்றம் கிழக்கே ஒரு கல் அளவு. சம்பந்தர் குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை, உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ரும்கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும்கற் பகத்தைச்சிர் நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.