பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருத்தலப்பயணம் 173. தண்டலைநீள்நெறி (தண்டலைச்சேரி) நீள்நெறிநாதர்-ஞானாம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 4-5-56 10-3-கே. திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்தினின்று 3 கல் தொலைவு மணலி இரயில் நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. அரிவாட்டாய நாயனார் வீடு பேறு அடைந்த தலம். அவர் பிறந்த கண்ணமங்கலம் இத்தலத்திற்குக்கிழக்கே அரை மைலில் இருக்கிறது. இத்தலத்திற்குப்படிக்காசுப்புலவர் "தண்டலையார் சதகம்" என ஒரு நூல் இயற்றியுள்ளார். கோச்செங்கட்சோழன் வழிபட்ட தலம். சம்பந்தர் கருவர் உந்தியின் நான்முகன் கண்ணன்என்று இருவரும்தெரி யாஒரு வன்இடம் செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலை நீனெறி காண்மின்ே. 174. கோட்டுர் கொழுந்திசர்-தேன்மொழிப்பாவை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 27-7-57, 10-3-65. திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கு 9 கல் அளவு. கோட்டுரில் அடுத்தடுத்து இரண்டு சிவன் கோவில்கள் இருக்கின்றன. மேற்கே உள்ள திருக்கோயில் தேவாரம் பெற்றது. கிழக்கே உள்ள திருக்கோயில் திருவிசைப்பாப் பெற்றது. அக்கோயிலைக் கருவூர்த் தேவர்