பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 蕊 "கிழக்கோட்டுர் மணிஅம்பலம்" என்று பாடுவர். இத்தலத்தில் தேவாரக்கோயில் மிகப்பெரியது. அழகிய அமைப்பு உடையது. கிழக்கோட்டுர் மணிஅம்பலக்கோயில் பழைய சிறிய கோயில், சம்பந்தர் உருகு வார் உள்ளத்து ஒண்கடர் தனக்குஎன்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமுத எணநின்து பரிவொடு பத்திசெய்து எத்திசையும், குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டுர்நற் கொழுந்தே!என்று எழுவார்கன் அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவன் அருள் பெறலாமே. கருவூர்த்தேவர் திருதுதல் விழியும். பவனவாய் இதழும், திலகமும் உடையவன் சடைமேல் புரிதரு மலரின் தாதுநின்று ஊதப் போய்வரும் தும்பிகாள் இங்கே கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவுகம் பலைசெய்கிழ்க் கோட்டுர் வருதிறல் மணிஅம் பலவனைக் கண்டுஎன் மனத்தையும் கொண்டுபோ துமினே. 175. திருவெண்துறை (திருவண்டுதுறை) வெண்துறைநாதர்-வேல்நெடுங்கண்ணி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 27-7-57, 22-6-65. மள்னார்குடி இரயில் நிலையத்தினின்றும் கிழக்கு 6 கல் தொலைவு. கோட்டுருக்கு வட மேற்கு 5 கல்.