பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 157 குள் அத்தலத்தைப்பற்றிய ஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருந்ததாகவும் கூறப்பெறுகிறது. இப்போது இக்கோயில் செப்பனிடப் பெற்றிருக்கிறது. முன்னே தேவாரத்தலம் 274 ஆக இருந்தது. இத்தலத்தைச் சேர்த்து இன்று 275 ஆக இருக்கின்றது. இத்தலம் 1917 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தலத்தை ஐயடிகள் காடவர்கோன் பதினோராம் திருமுறையில் கேடித்திரத் திருவெண்பாவில் பாடியிருக்கின்றார். "பாண்டவாய்த் தென்இடைவாய்" என்று அப்பாடலில் வருகின்றது. பாண்டவ ஆறு என்ற ஆற்றின் கரையில்தான் கோயில் இருக்கிறது. கொரடாச்சேரி இரயில் நிலையத்தினின்றும் தெற்கே, கூத்தாநல்லுனருக்குப் போகும் சாலையில் ஒரு மைல் சென்று. பாண்டவாறு என்னும் ஆற்றின் பாலத்தைக் கடந்து, தென் கரையோரம்சிறிதுதுரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பக்கத்தில் பாவாக்குடி என்னும் கிராமம் இருக்கிறது. சம்பத்தர் எண்ணா தஅரக் கன்உரத் தைநெரித்து. பண்ணார் தருபா டல்உகந்து அவற்பற்றாம் கண்ணார் விழவில் கடிவீ திகள்தோறும் விண்ணோர் களும்வந்து இறைஞ்சும் விடைவாயே. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே! வேண்டுவா யாகி விரைந்துஒல்லைப்-பாண்டவாய்த் தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம் நின்னிடைவாய் வைத்து நினை. 178. பேரெயில் (ஒகைப்பேரையூர்) சகதிசுரர்-சகந்நாயகி அப்பர் : 1. வழிபட்டநாள் : 4-9-57, 21-6-65. காரைக்குடி-மாயூரம் இருப்புப் பாதையில் உள்ள மாவூர் ரோடு என்னும் இரயில் நிலையத்தினின்றும். மேற்கே 5 கல்