பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருத்தலப்பயணம் தொலைவிலுள்ள வடபாதிமங்கலத்தை அடைந்தது.அங்கிருந்து ஒரு மைல் வடக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். அப்பர் உழைத்தும் துள்ளியும் உள்ளத்து ளேஉரு இழைத்தும் எந்தை பிரான்என்று இராப்பகல் அழைக்கும் அன்பின ராய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. 179. திருக்கொள்ளிக்காடு அக்கினிசுரர்-பஞ்சினுமெல்லடியாள் சம்பந்தர் : 1. வழிபட்டதான் : 27-7-57, 22-6-65. காரைக்குடி-மாயூரம் இருப்புப் ப்ர்தையில் உள்ள திருநெல்லிக்காவல் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கு 2% கல் தொலைவு வழியில் ஒரு மைலில் திருத்தெங்கூர் என்னும் தலம் இருக்கிறது. சம்பந்தர் பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்துஅடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. 180. திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர்-பெரியநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டதாள் : 1.1-5-56, 21-6-65. காரைக்குடி-மாயூரம் இருப்புப் பாதையிலுள்ள திருநெல்லிக்காவல் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கு ஒரு மைல்.