பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருத்தலப்பயணம் யுள்ளார். கோட்புலி நாயனார் உருவம் கோயிலில் இருக்கின்றது. சுந்தரர் அஞ்சா தேஉமக்கு ஆட்செய வல்வேன்; யாதினுக்கு ஆசைப் படுகேன் பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா! எம்பர மேட்டி! மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே! மாணிக்க வண்ணா! நஞ்சேர் கண்டா வெண்தலை ஏந்தி நாட்டியத் தான்குடி நம்பீ! சேக்கிழார் நலம்பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண் குலம்பெருக வந்துஉதித்தார் கோட்புலியார் எனும்பெயரார் தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப் புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப்புகழ்விளைப்பார் 183. திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர்-கைலாயநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 4-9-56, 9-3-85. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில். திருவாரூரினின்றும் 8 மைல். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று.