பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருத்தலப்பயணம் வடக்கு இரண்டு மைலில் கன்றாப்பூர் இருக்கிறது. வடகிழக்கில் அண்மையில் திருவிசைப்பாப் பெற்ற சாட்டியக்குடி என்னும் தலம் இருக்கிறது. சம்பந்தர் பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. அப்பர் நல்லான்கண் நான்மறைகள் ஆயி னான்காண்; தம்பன்காண் நணுகாதார் புரமூன்று எய்த வில்லான்காண்:விண்ணவர்க்கு மேலா னான்காண்; மெல்லியலாள் பாகன்காண்வேத வேள்விச் சொல்லான்காண் சுடர்மூன்றும் ஆயி னான்காண்; தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய வல்லான்காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்:அவன்என் மனத்து ளானே. சுந்தரர் நல்இசை ஞானசம் பந்தனும், நாவினுக்கு அரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துஉகப் பானை. தொண்ட னேன்.அறி யாமை அறிந்து கல்இ யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை, வலிவ லம்தனில் வந்துகண் டேனே. 186. கைச்சினம் கைச்சினநாதர்-வெள்வளைநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 1.1-5-56, 9-3-65. காரைக்குடி - மாயூரம் இருப்புப் பாதையில் 2-6iròms