பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழதாடு ##3 திருநெல்லிக்கா இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 2 கல் அளவு. திருத்துறைப்பூண்டி-திருவாரூர் நெடுஞ்சாலையில், திருத் துறைப்பூண்டியினின்றும் 7 கல் அளவு. சம்பத்தர் வரிஅரவே தானாக மால்வரையே வில்லாக எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான் பொரிசுடலை சமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரிஉரியான் மேவிஉறை கோயில் கைச்சினமே. 187. திருக்கோளிலி (குவளை) கோளிலிநாதர்-வண்டமர்பூங்குழலி சம்பத்தர் . அப்பர் 2. சுந்தரர் 1. வழிபட்டதாள் : 5-9-58, 9-3-85. கைச்சினத்திற்குக் கிழக்கே 4 கல் அளவு. இது சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்துக்கு முக்கால் மைல் அளவில் வைப்புத்தலமாகிய குண்டையூர் இருக்கிறது. எட்டிக்குடி என்னும் சிறந்த முருகனுக்கு உரியதலம் இங்கிருந்து ஒன்றரைக் கல் அளவு. சம்பந்தர் நாளாய போகாமே நஞ்சுஅணியும் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வாம் மடநெஞ்சே! அரன்நாமம் கேளாய்! நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளி, கோளாய நீக்கும்.அவன் கோளிலிஎம் பெருமானே. அப்பர் விண்ணு ளார்.தொழுது ஏத்தும் விளக்கினை. மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினை. பண்ணு ளார்பயி லும்திருக் கோளிலி அண்ண லார் அடி யேதொழுது உய்ம்மினே.