பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருத்தலப்பயணம் சுந்தரர் நீள நினைத்துஅடி யேன்உமை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மட வாள்.அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை ஆர்சிலநெல்லுப்பெற்றேன் ஆளிலை.எம்பெரு மான்!அவை அட்டித் தரப்பணியே. 188. திருவாய்மூர் வாய்மூர்நாதர்-பாலினும்நன்மொழியாள் சம்பத்தர் 1. அப்பர் 2. வழிபட்டநான் : 5-9-56, 9-3-65. கோளிலியின்றும் தென்கிழக்கே 3 கல். வழியில் எட்டிக்குடி இருக்கிறது. இது சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. சம்பந்தர் வெங்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண உடைமேல்ஒர் பந்தம்செய்து அரவுஅசைத்து ஒலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்; சிந்தனை புகுந்துஎனக்கு அருள் நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ வந்தனை பலசெய இவராள் நீர் வாய்மூர் அடிகள் வருவாரே. அப்பர் திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யார்இவர் பித்தரே.