பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

以 W ஆறு தலங்களுக்கும் சென்று வந்திருக்கின்றோம். எஞ்சிய திரைலோக்கிய சுந்தரம், திருக்களந்தை ஆதித் தேச்சுரம் என்ற இரண்டிற்கும் நான் முன்னே சென்று வந்திருக்கின்றேன். எனவே எனக்குத் திரு விசைப்பாத்தலம் பாக்கி இல்லை. இப்பயணத்தில் தேவார வைப்புத்தலங்கன் ஆறுக்குச் சென்று வந்திருக்கிறோம். வைப்புத்தலங்கள் என்பன தேவாரத்தில் தனிப்பதிகம் இல்லாமல், மற்றைய தலப்பதிகத்தில் வைத்துப் பாடுபவை. இத்தகைய தலங்கள் தேவாரத்தில் ఓ ఖి இருக்கின்றன. திவ்வியப் பிரபந்தத்தில் வைப்புத்தலம் என்று தனியே இல்லை. பதிகம் பெற்ற திருப்பதி, இடையில் வைக்கப் பெற்ற திருப்பதி எல்லாம் சேர்த்தே திவ்வியப் பிரபந்தத்தலம் 108 தான். மேற்குறித்த பாடற் கோயில்கள் தவிர,31சிவன்கோயிலுக்கும், 13 திருமால் கோவிலுக்கும், 2 அம்பிகை கோவிலுக்கும், 14 முருகன் கோவிலுக்கும்,14 அடியார்கள்கோவிலுக்கும் சென்று வந்திருக்கிறோம். மொத்தத்தில் இப்பயணத்தில் சென்று வணங்கியகோயில்கள் 456. அவற்றின் விபரமான பட்டியலை இந்நூலின் பின்னே சேர்த்திருக்கிறோம். பாடல் பெற்ற கோயில் ஒவ்வொன்றிலும், அத்தலத்திற்குரிய, தேவார-திருவாசக-திவ்வியப்பிரபந்தப்பாசுரங்களைப்பாடி வணங்கினோம். அதிகமாக இருந்த தலப் பாடல்களையும், தலம் குறிப்பிடாத பாடல்களையும் வீட்டில் படித்து முடித்தோம். எனவே இப்பயணத்தின் காரணமாகத் தேவாரப் பாடல் எண்ணாயிரமும், திவ்வியப் பிரபந்தப் பாடல் கிட்டத்தட்ட நாலாயிரமும் படித்து முடிக்கும்பேறு பெற்றோம். பெரியோர்கள் பாடிய கோயிலை வனங்குவது கிடைத்தற்கரிய பேறு. முன்னர் ஒரு முறை நான் முழுதும் சென்றிருந்தாலும், திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால், அன்பர் வேங்கடாசல னார் அழைத்த போது, கழிபேரு வகையுடன் ஏற்றுக்