பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு #65 189. திருமறைக்காடு (வேதாரணியம்) மறைக்காட்டீசர்-யாழைப்பழித்தமொழியாள் சம்பந்தர் : 4. அப்பர் : க. சுந்தரர் :1. வழிபட்டதான் : 26-7-57, 16-3-85. இரயில் நிலையம், திருத்துறைப்பூண்டியினின்றும் தென்கிழக்கு 22 மைல். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. இது வேதங்கள் வழிபட்ட தலம். அப்பர் சுவாமிகளும், சம்பந்த மூர்த்திகளும் மறைக் கதவைத் திறக்கவும், அடைக்கவும் தேவாரம் பாடிய தலம். சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாளுடன் சென்று வணங்கிய பதி. கடற்கரை தகரம். "தூண்டுசுடரனையசோதி கண்டாய்" என அப்பர் சுவாமிகள் பாடியதற்கு ஏற்ப,விளக்குகளின்பேரொளியை இக்கோவிலில் இன்றும் காணலாம். கோயில் மிகப் பெரியது. மறைக்காட்டு நாதருக்கு யாழ்ப்பாணத்துச் சின்னத்தம்பி நாவலர் என்னும் புலவர் "மறைசை அந்தாதி" என்னும் சிறந்த திரிபு அந்தாதி ஒன்றைப் பாடினார். மதுரைமாநகருக்குத் திருவிளையாடல் புராணம் பாடிய கல்விக்கடல் பரஞ்சோதி முனிவர் பிறந்த சிறந்தபதி இது. பின்னாளில் சைவம் வளர்த்த பெரியார் தாயுமான அடிகள் பிறந்து அருளியது இத்தலத்திலேயே.