பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருத்தலப்பயணம் சம்பந்தர் மாலைமதி வாள்.அரவு கொன்றைமலர் துன்று.சடை நின்று சுழலக் காலையில்எ ழுந்தகதிர் தாரகைம -டங்கஅனல் ஆடும் அரனுசர் சோலையின்ம ரங்கள்தொறும் மிண்டிஇன வண்டுமது உண்டி சைசெய வேலைஒலி சங்குதிரை வங்கசுற -வம்கொணரும் வேத வனமே. அப்பர் மூரி முழங்குஒலிநீர் ஆனான் கண்டாய், முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்: ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய், இன்அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய், ஆரியன் கண்டாய். தமிழன் கண்டாய், அண்ணா மலைஉறைஎம் அண்ணல் கண்டாய்: வாரி மதகளிறே போல்வான் கண்டாய், மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. சுந்தரர் r யாழைப்பழித்து அன்னமொழி மங்கைஒரு பங்கன் பேழைச்சடை முடிமேல்பிறை வைத்தான்இடம் பேணில், தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும்மறைக் காடே சேக்கிழார் மன்றல் விரவு மலர்ப்புன்னை மணம்சூழ் சோலை உப்பளத்தின் மூன்றில் தோறும் சிறுமடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டுக் குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவும். அரசும் திருமுன்பு.