பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. திருஆலவாய் (மதுரை) சொக்கலிங்கம்:-மீனாட்சி சோமசுந்தரம்-அங்கயற்கண்ணி சம்பந்தர் : சி. அப்பர் : 2. வழிபட்டதான் : 40-4-58, 24-8-கே. இரயில் நிலையம், பாண்டி நாட்டின் தலைநகரம், கண்ணுதற் பெருங்கடவுள் சங்கப் புலவர்களோடு அமர்ந்து தமிழ் ஆராய்ந்த தனிச்சிறப்புடைய பெருநகரம். இறைவன் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பழம்பதி, மணிவாசகப்பெருமான் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக இருந்து அரசாண்ட அரும்பதி. மங்கையர்க்கரசியார் வாழ்ந்த நகரம் குலச்சிறையார் என்ற அமைச்சரும், மங்கையர்க்கரசியாரும் மன்னனைத் திருத்தி, "நின்றசீர் நெடுமாற நாயனார்" ஆக்கிய நீள்பதி, ஆலவாயுடையார். சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் கொடுத்த திருத்தலம். இத்தலத்திற்குப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்ற புலவர் "திருவாலவாயுடையார் திருவிளையாடல்" என்ற புராணம் பாடினார். அவருக்குப் பின்வந்த பரஞ்சோதி முனிவர். திருவிளையாடற் புராணம் என்னும் பெயரால், தமது அமுத கவிகளால், மதுரைமா நகரத்தை வாய்கொள்ளாமல் பாடி மகிழ்ந்தார். திருவாசகத்தில் இத்தலம் ஒன்பது இடங்களில் பாராட்டப் பெறுகிறது. 'கலிமதுரை' என்று அன்று திருவாசகம் சொன்னதற்கு ஏற்ப, இன்றும் ஆரவாரம் நிறைந்த மதுரையாகவே காட்சியளிப்பதைக் காண்கின்றோம். குமரகுருபர அடிகள் மதுரைமீனாட்சிக்கு அரிய பிள்ளைத் தமிழ் பாடினார். போரூர்ச் சிதம்பர சுவாமிகள் மீனாட்சி கலிவெண்பாச் செய்தார். இத்தலத்தைத் தேவார ஆசிரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள் பாடியிருக்கத்தான் வேண்டும். மறைந்தவற்றுள்