பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருத்தலப்பயணம் அவை போயிருக்கலாம். அவருக்கு முன்னே இருந்த சம்பந்தரும், அப்பரும் பெரிதும் பாராட்டிய மதுரையை. பல்லாற்றானும் சிறந்து விளங்கிய மதுரையை, பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள திருப்பூவணத்துக்கும் மிக அணித்தேயுள்ள திருப்பரங்குன்றத்திற்கும் வந்து பாடிய சுந்தரர், பாடாது ஒழிந்தார் என்று கூறுவது பொருந்தாது. சம்பந்தர் மங்கையர்க்கு அரசி. வளவர்கோன் பாவை. வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வசி, பாண்டிமா தேவி, பணிசெய்து நாள்தொறும் பரவ. பொங்கு.அழல் உருவன் பூதநா யகன்.நால் வேதமும், பொருள்களும் அருளி. அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே. அப்பர் முளைத்தானை. எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள் வளைத்தானை, வல்அசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நானாக் கோத்து. துளைத்தானைச் சுடுசரத்தால், துவள நீறா. துாமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடி, திளைத்தானைத் தென்கூடல் திருஆ லவ்வாய்ச் சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. மணிவாசகர் பண்கமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன்.பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கிர்த்தி வியன்மண் டலத்துஈசன், கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு புண்கமந்த பொன்மேணி. பாடுதும்காண் அம்மானாய்!