பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii கொண்டேன். நான் இனங்கியதில் அவர்கள் அடைந்த நன்மையைவிட, நான் அடைந்ததன்மை பெரிது ஆண்டவனை எத்துணை முறை வணங்கினால் என்ன? இத்தலப்பயணத்தில் என்னால் அவர்களும், அவர்களால் நானும் சிறப்படைந்தோம். அன்பர் வேங்கடாசலனார் எடுத்தகாரியம் எதையும் சிறப்புறச் செய்து முடிப்பவர். அதனால் இப்பயணத்தில் எவ்விதக் குறையும் எங்களுக்கு நேரவில்லை. தெய்வ பக்தியில் சிறந்த, தேவாரத்தலங்களைப் பல முறை வணங்கிய, சிவபூசைச் செல்வர். என் ஆருயிர் நண்பர் முத்த வெ. சொ. அவர்கள் இப்பயனத்தில் எங்களுடன் பெரும்பாலும் கலந்து கொண்டது எங்கட்கு உறுதுணையாக இருந்தது. நல்ல இரசிகர். அன்பர் க. வெ. ராம. இராமசாமிச் செட்டியார் அவர்கள் பெரும்பாலான தலங்களுக்கு எங்களுடன் வந்து ஊக்கம் அளித்தார்கள். என் மைந்தர், புலவர் மு. இராமசாமி உடன் வந்து, நல்ல பணி செய்து, ஆங்காங்கு, தேவார - திவ்வசியப் பிரபந்தப் பாடல்களைப் படித்து மகிழ்வித்தார். மற்றும் பல அன்பர்கள் எங்கள் பயணத்தில் அப்போதைக்கப்போது கலந்து கொண்டனர். சென்ற இடங்களில் பல பெரியார்கள் எங்கள் பயனத்திற்குப் பெருந்துணை புரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப் பட்டிருக்கின்றோம். தலையாத்திரையைக் களிப்போடு நடத்துதற்கு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து செல்லக் கூடிய, எல்லா வசதியும் உடைய, உலலாச ஊர்தி ஒன்றை அன்பர் வேங்கடாசலனார் கொணர்ந்தது பயணத்துக்கே தனி அழகைத் தந்தது. இப்பயணத்தில் அன்பர் வேங்கடாசலனார் நிறைந்த பொருளைச் செலவிட்டார். அதனால் ஒன்றும் குறைவில்லை. செலவிட்ட பொருளை விட, எத்தனையோ மடங்கு அருளை அவர் பெற்று விட்டார். பயணத்தில் உடன் வந்த அன்பர்க்ளை யெல்லாம் அன்னார் நன்கு கண்காணித்தார். அதினும் பெருமித மாக எனக்கு அவர் செய்த சிறப்பை மறக்குமாறு