பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 177 திருஆலவாயுடையார் மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்திற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆலவாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம். பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவசிய குடைக்கிழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன். தன்பால் காண்பது கருதிப் போந்தனன். மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. சேக்கிழார் மும்மைப் புவனங் களின்மிக்கதன் றேஅம் மூதூர் மெய்ம்மைப் பொருளாம் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார்திரு ஆல வாயில் எம்மைப் பவம்திர்ப் பவர்சங்கம் இருந்தது என்றால். வில்லிபுத்துனர் ஆழ்வார் வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறும் துவளம்கமழ் அதிசிதள தோயங்கள் படித்தே இளவண்தமிழ் எழுதுஏடுமுன் எதிர்ஏறிய துறைசூழ் தளவம்கமழ் புறவம்செறி. தண்கூடல் புகுந்தான். பரஞ்சோதிமுனிவர் திருவால வாய்க்குஇணையாம் ஒருதலமும் தெய்வமணம் செய்யப் பூத்த மருவார்பொற் கமலம்நிகர் திர்த்தமும்அத் திர்த்தத்தின் மருங்கின் ஞான உருவாகி உறைசோம சுந்தரன்போல் இகபரம்தந்து உலவா வீடு தருவானும் முப்புவனத் தினும்இல்லை உண்மை.இது சாற்றின் மன்னோ.