பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருத்தலப்பயணம் 195. திருஆப்பனுTர் (திருஆப்புடையார்கோயில்) ஆப்புடையார்-குரவம்கமழ்குழலி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-4-56, 26-8-65. மதுரைப் பெரிய கோயிலினின்றும் வடகிழக்கே ஒரு மைலில் இருக்கின்றது. அணித்தே வையை ஆறு ஓடுகின்றது. சம்பந்தர் இயலும் விடைஏறி எரிகொள் மழுவீசிக் கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்துஆட இயலும் இசையானை எழில்ஆப்ப னுரானைப் பயிலும் மனமுடையார் வினைப்பற்று அறுப்பாரே. 196. திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர்-ஆவுடைநாயகி சம்பந்தர் . சுந்தரர் 1. வழிபட்டநாள் : 10-4-56, 26-8-65. இரயில் நிலையம், மதுரைக்குத் தென்மேற்கே 4 கல் அளவு. முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்று. முருகன் தெய்வானையை மணம் புரிந்த தலம் இஃது. எனவே முருகன் பின்னே மணந்த வள்ளியம்மை உருவம் இங்கே இல்லை. இத்தலத்திற்கு நிரம்பு அழகிய தேசிகர் என்ற சைவப் புலவர் புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் மைத்தகு மேனி வாள்.அரக் கன்தன் மகுடங்கள் பத்தின திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றைச் சித்தமது ஒன்றிச் செய்கழல் உன்னிச் சிவன்என்று நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.