பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிதாடு 179 சுந்தரர் அடிகேன் உமக்கு.ஆட் செயஅஞ் சுதும்என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி, முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழித்து.ஆறும் ஓர் நான்கும் ஓர்ஒன் றினையும் படியா இவைகற்று வல்ல அடியார் பரம்குன்ற மேய பரமன் அடிக்கே குடியாகி வானோர்க்கும் ஓர்கோவும் ஆகிக் குலவேந்த ராய்விண் முழுதுஆன் பவரே. சேக்கிழார் தேன்நிலவு பொழில்மதுரைப் புறத்துப் போத்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை ஊன்நெகிழும் படிஅழிந்துஅங்கு ஒழுகு கண்ணிர் பாய்ந்து இழிய உணர்வின்றி வீழக் கண்டே "யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்டு இறைவர்பதி எனைப்பலவும் பணிவீர்" என்று ஞானம்.உணர் வார்.அருள அவரும்போத நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே. 197. திருஏடகம் ஏடகநாதர்-ஏலவார்குழலி சம்பந்தர் : 1. வழிபட்டதாள் : 3-4-56, 25-8-65. மதுரைக்கு வடமேற்கு 10 மைல் அளவு. திருஞான சம்பந்தர் புனல் வாதில் சமணர்களை வெல்லுதற்கு வைகை ஆற்றில் இட்ட "வாழ்க அந்தணர்" என்னும் தேவாரம் எழுதிய ஏடு எதிர்த்து வந்த இடம். இத்தலம் என்ப. அதனாலேயே ஏடகம் என்னும் பெயர் பெற்றது.