பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருத்தலப்பயணம் சம்பந்தர் பொய்கையின் பொழில்உறு புதுமலர்த் தென்றலார் வைகையின் வடகரை மருவி ஏடகத்து ஐயனை அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும் வெய்ய, வன்பிணிகெட வீடுள்ளி தாகுமே. 198. கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றீசர்-குயிலமிர்தநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 27-2-55, 24-8-65. காரைக்குடியிலிருந்து 13 மைலிலுள்ள திருப்புத்துனர் சென்று, அங்கிருந்து வடமேற்கே 15 கல் அளவில் இத்தலம் இருக்கிறது. திருப்புத்துர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையிலுள்ள சதுர்வேத மங்கலம் சென்று, அங்கிருந்து வடக்கே திரும்ப வேண்டும். மலையடிவாரத்தில் ஒரு கோயிலும், மலையில் சிறிது உயரத்தில் மற்றொரு கோயிலும் இருக்கிறது. வரையாது வழங்கிய பாரி வள்ளலின் பரம்பு மலை இதுவே. சம்பந்தர் பருமாமத கரியோடுஅரி இழியும் விரிசாரல் குருமாமணி பொன்னோடுஇழி அருவிக் கொடும்குன்றம் பொருமாளயில் வரைவில்தரு கணையில் பொடிசெய்த பெருமான்.அவன் உமையாளொடு மேவும் பெருநகரே.