பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருத்தலப்பயணம் 200. திருப்புனவாயில் பழம்பதிநாதர்-கருணைநாயகி சம்பந்தர் : சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 14-4-57 28-1-85. அறந்தாங்கி இரயில் நிலையத்தினின்றும் எட்டுமைலிலுள்ள மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட்கொண்டருளிய திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயில் வழியாகச் சென்றால் 30 மைலில் இத்தலம் இருக்கின்றது. திருஆடானை என்னும் தலத்தினின்றும் வடக்கே 12 மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இவ்வழியில் கோவிலுக்குப் பக்கத்தில் குறுக்கே பாம்பாறு என்ற ஒரு ஆறு ஓடுகிறது. ஆற்றுக்குப் பாலம் இல்லை. இத்தலத்துக்கு மிக அண்மையில் கடல் இருக்கின்றது. இங்கு சிவலிங்கம் மிகப் பெரியது. சம்பந்தர் வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க் காருறு கொன்றைவெண் திங்களா னும்கனல் வாயதோர் போருறு வெண்மழு ஏந்தினா னும்.புன வாயிலில் சிருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே. கந்தரர் சித்தம் நீதினை என்னோடு சூள் அறும் வைகலும் மத்த யானையின் ஈர்உரி போர்த்த மணாளன்ஊர் பத்தர் தாம்பலர் பாடிநின்று ஆடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅ றாப்புன வாயிலே. 201. இராமேச்சுரம் இராமனாதர்-மலைவளர்காதலி சம்பந்தர் : 2. அப்பர் : 1. வழிபட்டநாள் : 22-2-60, 16-9-65. இரயில் நிலையம். இத்தலம் கடற்கரை நகரம். கோவில் மிகப் பெரியது. கோயில் முழுமைக்கும் சேர்த்து ஒரே பெரிய பிரகாரமாக. அழகாகவும். ஒழுங்காகவும் அமைக்கப் பெற்றிருக்கின்றன.