பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருத்தலப்பயணம் சம்பந்தர் தேவியை வவ்விய தென்இலங் கைத்தச மாமுகன் பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போய்அற ஏவிய லும்சிலை அண்ணல்செய் தஇரா மேச்சுரம் மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. அப்பர் கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம் வீடவே சக்க ரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு தேடிமால் செய்த கோயில் திரு.இரா மேச்சு ரத்தை நாடிவாழ் நெஞ்ச மேதீ. நன்னெறி ஆகும் அன்றே. தாயுமான சுவாமிகள் மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம்எனவும் மெய்எலாம் உள்உடைந்து வீறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உறவேதனும் துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுஉன் தொண்டர்பணி செய்வதுஎன்றோ? அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவைவாயில் அம்மட்டும் அடியிட்டு நடைநடந்து அருள்அடிகள் அடிஈது முடிஈதுஎன வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே! வளமருவு தேவை அரசே! வரைரா சனுக்கு இருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே!