பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 135 202. திருஆடானை ஆடானைநாதர்-அன்புக்கொடி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 25-4-57, 17-3-85. தேவகோட்டையினின்றும் சுமார் 25 கல் அளவு, அங்கிருந்து சில மைல் தூரம் சென்றால் தொண்டிக் கடற்கரையை அடையலாம். சம்பந்தர் மாய னும்மல ரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் துளவிக் கைதொழத் திய வல்வினை திருமே. 203. திருக்கானப்பேர் (காளையார்கோயில்) காளையீசுரர்-சொர்ணவல்லி சம்பந்தர் : 1. சுந்தரர் 1. வழிபட்டநாள் : 4-4-58, 18-3-65. திருச்சி-மானாமதுரை இருப்புப் பாதையிலுள்ள நாட்டரசன் கோட்டை இரயில் நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. சிவகங்கை-தொண்டி பெருவழிச் சாலையில் சிவகங்கையி னின்றும் 11 மைல். பெரிய கோயில், மூன்று இறைவனும், மூன்று இறைவியும் இங்கு எழுந்தருளியிருக்கின்றனர். 1. காளிசர் - சொர்ணவல்லி 2. சோமேசர் - செளந்தரநாயகி 3. சொக்கேசர் - மீனாட்சி மருதுபாண்டியன் கட்டிய பெரிய இராசகோபுரம் சோமேசர் சந்நிதிக்கு எதிரில் இருக்கிறது. கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் தெப்பக்குளம் மிகப் பெரியது.