பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix இல்லை. அன்பர் வேங்கடாசலனார் இத்தகைய திருத்தலப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று யாரும் கருதியிருக்க மாட்டார்கள். இறைவன் அருள் கூட்டுமானால் எதுவும் நடக்கும். திருத்தலப் பயணத்தைவிட அவர் செய்த மற்றொரு சிறந்த செயலை இங்கே சொல்லப் போகின்றேன். நீங்கள் எல்லாம் வியப்படைவீர்கள். இப்போது அவர் சுத்த சைவர் என்றால் என்ன? புலால் உணவை அடியோடு நிறுத்தி விட்டார். இதை விட நல்ல செய்தி உங்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? எங்கள் திருப்பயணத்தை நூலாக வடித்துத் தர வேண்டும் என்பது பலர் விருப்பம். நான் முன்னர் பயணம் மேற்கொண்ட போதே இத்தகைய நூலொன்று எழுத விரும்பினேன். அப்பொழுது எழுதியிருந்தால் இரண்டாவது பயணம் இடம் பெற்றிருக்காதல்லவா? எனவேதான் ஆண்டவன் அதனை நிறுத்தினார் போலும். எங்களுக்குச் சிவன், திருமால் என்ற பாகுபாடு இன்மையின், இருவகையான தலப்பயணத்தையும் மேற்கொண்டோம். நான் முன்னர் சென்றபோதும் இரண்டு தலங்களுக்கும்தான் சென்று வந்தேன். எனவே இந்நூலில் சிவத்தலங்கள்,திருமால்தலங்கள் இரண்டையும் பற்றிய செய்திகள் நிறைய வந்திருக்கின்றன. இரண்டும் சேர்ந்த இந்நூல் பொது நோக்குடைய மெய்யறிவுடையாருக்குப் பெரிதும் பயன்படும். இந்நூலின் தனிச் சிறப்பு ஒவ்வொரு தலத்தையும் பற்றிய அருளாளர் பாடல்களைத் தலங்கள்தோறும் அமைத்திருப்பது. மொத்தம் தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தப் பாடல்களும், பின் வந்த பெரியார்கள் பாடல்களும் சேர்ந்து 813 அருட்பாக்கள் இந்நூலை அலங்கரிக்கின்றன. இவற்றைப் பாடம் செய்து அன்பர்கள் சிறப்படைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேவார - திவ்வியப் பிரபந்தத் தலங்களுள் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்த திருப்பணி யின் தொகை (ரூ. 4,46,39,500/-) ஏறக்குறைய நாலரைக் கோடி ரூபாய் ஆகும். அதன் விபரத்தை