பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருத்தலப்பயணம் கருவூர்த்தேவர் செம்மனக் கிழவோர் அன்புதா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச எம்மனம் குடிகொண்டு இருப்பதற் கியானார்? என்னுடை அடிமைதான் யாதே? அம்மணம் குளிர்நாள் பலிக்குஎழுந்து அருள அரிவையர் அவிழ்குழல் சுரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. 205. திருச்சுழியல் திருமேனிநாதர்-துணைமாலை சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 9-4-56, 25-8-65. மதுரையினின்றும் 38 கல் அளவு. விருதுநகர் இரயில் நிலையத்தினின்று 19 கல். மானாமதுரை-விருதுநகர் புதிய இருப்புப் பாதையில் உள்ள ஓர் இரயில் நிலையம். சுந்தரர் கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தம்கரைக்கு ஏற்றக் கொவ்வைத்துவர் வாயார்குடைந்து ஆடும்திருச் சுழியல் தெய்வத்தினை வழிபாடுசெய்து எழுவார்.அடி தொழுவார்; அவ்அத்திசைக்கு அரசாகுவர் அலராள்பிரி யாளே. 206. திருக்குற்றாலம் குறும்பலாநாதர்-குழல்வாய்மொழி சம்பந்தர் : 2. வழிபட்டநாள் : 31-1-58; 7-9-65. நெல்லை மாவட்டம் தென்காசி இரயில் நிலையத்திலிருந்து மேற்கே 4 கல் தொலைவு.