பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 189 இத்தலத்தில் குறும்பலா மரம் மிக்க சிறப்புடையது. வேறு எங்கும் இல்லாதபடி, திருஞான சம்பந்தர் திருக்குற்றாலத்திற்கு ஒர் அழகிய பதிகம் பாடியதோடு, திருக்குறும்பலாவுக்கும் ஒரு தேவாரப் பதிகம் பாடினார். கோயில் மலை அடிவாரத்தில் சங்கு வடிவத்தில் இருக்கின்றது. கோவிலுக்குப்பக்கதில் மலையினின்றும் அழகியபெரிய அருவி விழுகின்றது. பருவ காலத்தில் பல பகுதிகளினின்றும் கணக்கற்றவர்கள் வந்து இத்தலத்தில் தங்கி மகிழ்கின்றனர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தப் பெருமான் "கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்" என்று பாடி அருளினார். அவஇயற்கைக் காட்சியை இன்றும் தாம் கண்டு நுகர்ந்து மகிழ்கின்றோம். இத்தலம் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய "சித்திர சபை"யை உடையது. திருநாவுக்கரசு சுவாமிகள் தனிப் பதிகம் பாடாவிட்டாலும் திருக்குற்றாலத்தைப் பதின்மூன்று இடங்களில் பாராட்டுவார். சுந்தர மூர்த்திகள் குற்றாலத்தை ஊர்த்தொகையில் ஓர் இடத்தில் கூறுவர். சிவபெருமான் திருஅந்தாதியில் கபிலர் பெருமான் குற்றாலத்தைப் பாராட்டியுள்ளார். பட்டினத்து அடிகள் குற்றாலத்தைப் பாடி மகிழ்வார். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் இத்தலத்தை மூன்று இடங்களில் பாராட்டுவதோடு, திருக்கோவையாளிலும் பாராட்டியுள்ளார். திருக்குற்றாலத்திற்குத் திரிகூட ராசப்பக் கவிராயர் என்ற பெரும்புலவர்.புராணம்,குறவங்சிமுதலியன இயற்றியுள்ளார். கோயிலினின்றும் மூன்றுமைல் அளவில் ஐந்து அருவி என்ற சிறந்த அருவி இருக்கின்றது. ஐந்து பிரிவாக விழுவதால் இப்பெயர் பெற்றது. இன்னும் பற்பல அருவிகளையும். ஒடைகளையும் ஆங்காங்குக் காணலாம். மலைக்கு மேல் 1% மைலில் செண்பக அடவி அருவியும், அதற்குமேல் 1%மைலில் கண்டவரை அச்சுறுத்தும் பெரிய தேனருவியும் விழுகின்றன. குற்றாலத்திற்கு 1% மைலில் திருப்புகழ் பெற்ற இலஞ்சி என்ற முருகன் தலமும், சுமார் 8 மைலில் திருமலை என்னும் உயரமான மலையின் மீதுள்ள முருகன் தலமும் இருக்கின்றன. திருமலை முருகனுக்குக் கவிராச பண்டாரத்து ஐயா என்ற புலவர் அழகிய பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.