பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருத்தலப்பயணம் சம்பந்தர் போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக் கூதல் மாரி துண்துளி துரங்கும் குற்றாலம் மூதுர்இலங்கை முட்டிய கோனை மிறைசெய்த நாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள். தலைவான் மதியம் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி முலையாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முதுவேய் சூழ்ந்த மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்துஇழியும் மல்கு சாரல் குலைவாழைத் திங்கனியும். மாங்கனியும் தேன்பிலிற்றும் குறும்ப லாவே. அப்பர் உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போம் பொழுது குற்றா லத்துஉறை கூத்தன்அல் லால்நமக்கு உற்றார் ஆருள ரோ. -திரு அங்கமாலை சுந்தரமூர்த்திகள் கொங்கிற் குறும்பிற் குரக்குத்தளியாய் குழகா குற்றாலர் -ஊர்த்தொகை மணிவாசகர் உற்றாரை யான்வேண்டேன்.ஊர்வேண்டேன்.பேர்வேண்டேன்; கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும் குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தா!உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே!