பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு #91 க.சிலர் கூற்றும் பொருளும்போல் காட்டிஎன் கோலவனையைக் கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன்-கூற்றின் செருக்குஅழியச் செற்ற சிவற்குஅடிமை நெஞ்சே செருக்குஅழியா முன்னமே செய். பட்டினத்தார் பாடல் காலன் வருமுன்னே கண்பஞ்சு அடைமுன்னே பால் உண் கடைவாய் படுமுன்னே-மேல்விழுந்தே உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. திரிகூடராசப்பக் கவிராயர் வற்றாத வடஅருவி படித்துசங்க வீதிதனில் வலம்கொண்டு ஏகிப் பற்றாத பிறைமவுலிப் பரமனையும் தேவியையும் பணிந்து போற்றிக் கற்றார்கள் உடன்கூடிக் கண்ணுதல்சிர் பாடிஒரு கடிகைப் போது குற்றாலத்து இருந்தவர்கள் கயிலாயத்து இருப்பர்கற்ப கோடி காலம். -திருக்குற்றாலப் புராணம் 207. திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 9-8-59, 5-9-65. இரயில்வே நிலையம். இங்கு அழகிய தாமிரவருணி என்னும் தண்பொருதை ஆறு ஒடுகிறது. பஞ்ச சபைகளில் ஒன்றாகிய "தாமிர சபை" யை உடையது இது.