பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. திருஅஞ்சைக்களம் அஞ்சைக்கனத்து.அப்பர்-உமையம்மை சுத்ததர் : 1. வழிபட்டதான் : :3-7-58, 3-4-85. மலை நாட்டில் உள்ள ஒரே தேவாரத் தலம் இது. திவ்வியப்பிரபந்தத் தலங்கன் மலை நாட்டில் பதின்மூன்று இருக்கின்றன. தேவாரத் தலம் இது ஒன்றுதான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமான் நாயனாரோடு வீடுபேறு அடைந்த தலம் இது. இங்கு. சுந்தரர், சேரமான் பெருமாள் இருவரின் திரு உருவங்கள் இருக்கின்றன. இத்தலம் சென்னை-கொச்சின் இருப்புப் பாதையிலுள்ள இருஞாலக்குடா என்ற இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கல் தொலைவு. திருச்சூருக்கு 20 மைல் அளவில் உள்ளது. கோவையிலிருந்து சுமார் 100 மைல். இங்கிருந்து சிறிது துரத்தில் கடற்கழிவு இருக்கிறது. சேரமான் பெருமான் அரசாண்டகொடுங்கோளூர் இத்தலத்துக்கு மிக அண்மையில் இருக்கிறது. அங்குக்கண்ணகிக்கு ஒருகோயில் காணப்படுகிறது. சுந்தரர் வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட்டு ஒழிந்தேன். விளங்கும் குழைக்கா துடைவே தியனே! இறுத்தாய் இலங்கைக்கு இறையா பவனைத் தலைபத் தொடு,தோன் பலஇற் றுவிழ: கறுத்தாய் கடல்நஞ்சு அமுதுண்டு கண்டம் கடுகப் பிரமன் தலைஐத் திலும் ஒன்று அறுத்தாய்! கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத்து அப்பனே!