பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧ நூலின் பின்னே சேர்த்திருக்கின்றோம். இத்தலங்களில் செய்த கோயில் திருப்பணிதான் இந்தத் தொகை பாடசாலை. நந்தவனம் முதலிய அறச் செயல்களின் கணக்கு இதில் சேரவில்லை. இது தவிர, பாடல் தலங்கள் அல்லாத கோவில்கள் பல நகரத்தார் கட்டியிருக்கின்றனர். இந்நூலில் தேவாரத் தலங்களையும், திவ்வியப் பிரபந்தத் தலங்களையும் வணங்கும் "போற்றிப் பாடல்"கள் பின்னே சேர்க்கப்பெற்றிருக்கின்றன. அது வணங்குவார்க்குப் பெரிதும் பயன்படும். இந்த நூலை, சுருங்கிய காலத்திற்குள் மிக அழகாக அச்சிட்டுத் தந்த, சென்னை பதஞ்சலி அச்சக உரிமையாளர் அன்பர் பதுமநாப அய்யர் அவர்கட்கும் அதன் நிருவாகியாகிய "அம்மாஞ்சி" என்று அன்போடு அழைக்கப்படும்பதுமநாபன் அவர்கட்கும் நன்றி. என் நூல் எல்லாவற்றினும் எனக்குப் பெருந் துணையாக இருக்கும். எங்களூர் பொறியியற்கல்லூரியில் பணிபுரியும், எனது அருமைத் துணைவர் பதுமநாபன் அவர்கட்கு நன்றி. இந்நூல் எழுதுவதில் துணைபுரிந்த காரைக்குடி அழகப்பா கல்லூரித்தமிழ்ப்பகுதியைச் சேர்ந்த அன்பர்கள் விசுவனாதன், சொக்கலிங்கன், முருகப்பன் ஆகியவர்கட்கு நன்றி. இந்த நல்ல நூலை உள்ளக்களிப்புடன் தம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவாகிய இன்று வெளியிட்டுப் புகழ் பெறும், என் மீது பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட அரிய நண்பர் வேங்கடாசலனாருக்கு நன்றி. இன்று மணிவிழாக் காணும் அன்பர் வேங்கடாசலனாருக்கு இன்னோரன்ன பணிகள் பல செய்து உயர, பல்லாண்டு பல்லாண்டு கூறுகின்றேன். சென்னை 18-ić-66 ராய. சொ.