பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209. அவிநாசி அவிநாசிஅப்பர்-கருணாம்பிகை சுந்தரர் : 1. வழிபட்டதான் : 23-4-57, 10-1-66. திருப்பூர் இரயில் நிலையத்தினின்றும் 8 கல் அளவு. வழியில் 5 கல் அளவில் திருமுருகன்பூண்டி என்னும் தலம் இருக்கிறது. ஈரோடு-கோயம்புத்துர் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட நடு மையத்தில் இத்தலம் இருக்கிறது. கோவில் பழமையானது. சுந்தரமூர்த்திகள் முதலைவாய்ப் பிள்ளையை அழைத்துக் கொடுத்தது இத்தலத்திலேயே. கோவிலினின்றும் சிறிது துரத்தில் ஓர் ஏரி இருக்கின்றது. அவ்ஏரியில்தான் முதலை வாய்ப்பிள்ளையை அழைத்ததாகக் கூறப்பெறுகிறது. ஏரிக்கரையில் சுந்தரருக்கு ஒரு கோயில் இருக்கிறது. அக்கோயிலில் முதலை வாயினின்றும் பிள்ளை வருவதுபோன்ற பாவனையில் சிலை இருக்கின்றது. இத்தலத்தை, புக்கொளியூர்.அவிநாசி என்ப. இத்தலத்தைத் திருவாசகம் பாராட்டும், கொங்கு நாட்டில் திருவாசகம் பெற்ற தலம் இது ஒன்றுதான். சுந்தரர் உரைப்பார் உரைஉகந்து உள்கவல் லார்தங்கள் உச்சியாய்! அரைக்குஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக்காடு சோலைப் புக்கொளி ஊர்அவி நாசியே! கரைக்கால் முதலையைப்பிள்ளை தரச்சொல்லுகாலனையே. மணிவாசகர் நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சது ஏற்றும் பெருந்துறையாய்!