பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இருத்தலப்பயணம் அரிய பொருளே! அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே! தெரிய அரிய பரஞ்சோதி! செய்வது ஒன்றும் அறியேனே! சேக்கிழார் நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் பூட்டார் மார்பின் சிறயமறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த் தாள்தா மரையின் மடுவின்கண் தனிமா முதலை வாய்நின்றும் மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பவனே. 210. திருமுருகன்பூண்டி முருகநாதர்-முயங்குபூண்முலையாள் சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 23-4-57, 10-1-66. திருப்பூர் இரயில் நிலையத்தினின்றும் 5 கல் தொலைவு. ஈரோடு-கோவை நெடுஞ்சாலையிலுள்ள அவிநாசியினின்றும் 3 கல் தொலைவு. சேரமான் பெருமாளிடம் மலைநாட்டில் பெற்றுவந்த பொருள்களைக் கள்வர்கள் கவர்ந்துகொள்ள, பாட்டுப் பாடி மீட்ட தலம் இது. சுந்தரமூர்த்திகள் திருவுருவம் கோயிலில் இருக்கிறது.