பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாடு 201 சுந்தரர் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறுஅ லைக்கும்இடம் முடுகு நாறிய வடுவர் வாழ்முரு -கன்பூண் டிமாந கர்வாய் இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எதுக்கு இங்குஇருந் திர்எம்பி ராணிரே. 21. திருநணா (பவாநி) கூடுதுறைநாதர் திருநணாஉடையார்-வேதாம்பிகை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-4-57, 8-1-88. ஈரோட்டினின்றும் 10 கல் தொலைவு. காவிரி ஆறும், பவாதி ஆறும் கூடும் இடத்தில் கோவில் அமைந்திருக்கிறது. மிகப் பழைய கோயில். இப்போது சுவாமி கோயில் மட்டும் பெரும் பொருட் செலவில் அருமையான வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டு வருகின்றது. விரைவில் வேலை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோவிலின் ஒரு பகுதியில் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி இருக்கிறது.