பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருத்தலப்பயணம் சம்பந்தர் வில்லார் வரையாக மாதாகம் நானாக வேடம் கொண்டு புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும் அல்லாத சாதிகளும் அங்குஅழல்மேல் கைகூப்ப அடியார் கூடிச் செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருத னாவே. 212. கொடிமாடச்செங்குன்றுரர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுரர்-பாகம்பிரியாள் சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-4-57 8-1-66, ஈரோடு-சேலம் இருப்புப் பாதையிலுள்ள சங்கரிதுர்க்கம் என்னும் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 6 கல் அளவு. ஈரோட்டிலிருந்து கார்ப்பாதை 10 மைல். கோயில் பெரிய உயரமான மலையின்மீது இருக்கிறது. ஏராளமான படிகள் ஏறவேண்டும். இத்தலத்தில் திருப்பரங்குன்றத்தைப்போல, செங்கோட்டு வேலவன் சந்நிதி மிக்க சிறப்புடையது. ஆதி கேசவப் பெருமாள் சந்நிதி ஒன்றும் கோயிலில் இருக்கிறது. இத்தலத்தில் ஓர் தனிச்சிறப்பு மூலஸ்தானம் சிவலிங்கம் அல்ல. அர்த்தநாரி வடிவத்தில் (அம்மை-அப்பனாக) ஒரு ஆள் உயரத்தில் கடவுள் காட்சி அளிக்கின்றார். விக்கிரகத்தின் நிறம் பழநியாண்டவரைப்போல, வெண்மை கலந்து காணப்படுகிறது. இங்கு அம்மையப்பர் சந்நிதி மேற்கு நோக்கியும். செங்கோட்டு வேலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இருக்கின்றன.