பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாடு 芝●3 தோலும், துகிலும், குழையும். சுருள்தோடும் பால்வெள்ளை நீறும், பசுஞ்சாந்தும், பைங்கிளியும். சூலமும், தொக்க வனையும்உடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துஊதாய் கோத்தும்பீ! என்ற திருவாசகத்தின் பொருளாக இங்கே அம்மை-அப்பன் நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். விறல்மிண்ட நாயனார் பிறந்தருளிய திருத்தலம் இஃது என்று சிலர் கருதுவதாகத் தெரிகிறது. சேக்கிழார் கருத்துப்படி அத்தலம் இஃது அன்று. மலைநாட்டிலுள்ள செங்குன்றுார் என்று சேக்கிழார் ஐயத்துக்கு இடமின்றிக் கூறுகின்றார். "சேரர்திருநாட்டு ஊர்களின்முன் சிறந்த மூதுர்ர் செங்குன்றுார்" என்று விறல்மிண்ட நாயனார் பிறந்த ஊரைச் சேக்கிழார் செப்புவார். அந்தச்செங்குன்று ர் மலைநாட்டிலுள்ள திவ்வியப் பிரபந்தத் தலங்கள் பதின்மூன்றனுள் ஒன்று. அங்குச் சிவன் கோவிலும் இருக்கிறது. சம்பந்தர் அலைமலி தண்புனலோடு அரவம் சடைக்குஅணிந்து ஆகம் மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக் குலைமலி தண்பொழில்து.ழ் கொடிமாடச் செங்குன் றுணர்நின்ற தலைமக னைத்தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. 213. வெஞ்சமாக்கூடல் விகிர்தநாதர்-பண்ணேர்மொழியாள் சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 11-11-56, 7-1-66. கருவூருக்குத் தெற்கே அரவக்குறிச்சிச் சாலையில் 12 மைல்