பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருத்தலப்பயணம் சென்று, அங்கிருந்து கிழக்கே மூன்று மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவில் மிகப் பழையது. தேடாத நிலையில் இருக்கின்றது. கோயில் இருக்கும் இடம் ஒரு பள்ளத்தாக்கு. அணித்தே ஒரு சிற்றாறு ஓடுகின்றது. சுந்தரர் காடும். மலையும்.நாடும் இடறிக் கதிர்மா மணி.சந் தனமும். அகிலும், சேடன் உறையும் இடம்தான் விரும்பித் திளைத்தெற்று சிற்றா றதன்கிழ்க் கரைமேல் பாடல் முழவும் குழலும் இயம்பப் பனைதோ ளியர்பா டலொடுஆ டல்அறா வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா! அடியே னையும்வேண் டுதியே. 214. திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) கொடுமுடிநாதர்-பண்மொழிநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 11-11-56, 7-1-66, திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள ஓர் இரயில் நிலையம். கோவிலுக்கு நேராகக் காவிரி ஆறு ஓடுகின்றது. இக் கோயிலுக்குள் பெருமாளுக்கு ஒரு சந்நிதியும், பிரமனுக்கு ஓர் உருவமும் இருக்கிறது. எனவே மும்மூர்த்தித் தலம் என்று கூறுவர். சுந்தரமூர்த்திகள் "நமச்சிவாய" திருப்பதிகம் பாடியது இத்தலத்திற்குத்தான். கொங்குநாட்டில்மூவர் தேவாரமும்பெற்ற தலம் இஃது ஒன்றே.